Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் இறுதி நாள் பணவீக்கத்தால் உயர்ந்த சந்தை!

 மாலை 3.30 மணி நிலவரம்

 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (14.10.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிகரித்து நிறைவடைந்தது.
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 439.23 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 69.68 புள்ளிகள் உயர்ந்து 27,712.79 புள்ளிகளாக இருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு, மூலதன பொருட்கள், பொதுத்துறை நிறுவனம், ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோத் துறை போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22.70 புள்ளிகள் அதிகரித்து 8,596.05 புள்ளிகளாக இருந்தது. சர்வதேச சந்தை சாதகமாக வர்த்தகமாகி வருவதாலும், செப்டம்பர் சிபிஐ டேட்டா சப்போர்ட் ஆக இருந்த காரணத்தினாலும் காலை நேர வர்த்தகத்தில் சந்தை அதிகரித்து காணப்பட்டது. 
 
இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான செப்டம்பர் மாத பணவீக்கம் 3.57 சதவிகிதமாக குறைந்தது. இது இதற்கு முந்தைய மாதத்தில் 3.74 ஆக இருந்தது. அதைப்போல நுகர்வோர் விலை குறியீட்டு செப்டம்பரில் 4.31 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய மாதத்தில் 5.05 சதவிகிதமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 30.49 புள்ளிகள் உயர்ந்து 27,673.60 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 10.05 புள்ளிகள் உயர்ந்து 8,583.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெயில் 430.40 4.04
லார்சன் 1,474.85 2.53
டாடா மோட்டார்ஸ் (டி) 361.95 2.25
டாடா மோட்டார்ஸ் 556.10 2.06
ரிலையன்ஸ் 1,077.65 1.94
 
விலை குறைந்த பங்குகள்
 
ஜீ எண்டர்டெயின் 528,50 -3,30
பார்தி இன்ப்ராடெல் 365,20 -2,44
இன்போசிஸ் 1,027.15 -2,39
ஹெச்யூஎல் 842,25 -2,30
ஐடியா செல்லுலார் 74,70 -1,78

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP