Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறுவனத்தின் பெயர் மாறுகிறதா? முதலீட்டாளர்கள் இரட்டை உஷார்..!

 
அண்மைக் காலத்தில் குறிப்பிட்ட ஒரு துறை சிறப்பாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. உதாரணத்துக்கு இன்ஃப்ரா என்று வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் ஏற்கெனவே வேறு பெயரில் சுமாராக இயங்கி கொண்டிருக்கும் சில நிறுவனங்கள் இந்த "இன்ஃப்ரா" என்கிற அடைமொழியோடு பெயரை மாற்றிக் கொள்ளும். காரணம், வளர்ச்சி துறை நிறுவனம், என இதன் பங்குகளை அதிகம் விவரம் தெரியாத முதலீட்டாளர்கள் வாங்குவார்கள் என்கிற கணிப்புதான்.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் திடீரென அதன்  பெயரை மாற்றுகிறது, குறிப்பாக பெயரில் செக்டார் பெயரை சேர்த்துக் கொள்கிறது அல்லது செக்டார் பெயரை மாற்றிக் கொள்கிறது என்றால் மிகவும் உஷாராக இருப்பது அவசியம். 
 
பங்கின் விலை ஏற ஆரம்பித்திருக்கிறது என்பதற்ௐகாக கண்ணை மூடிக் கொண்டு முதலீடு செய்யக் கூடாது. பெயர் மாற்ற பின்னணி என்ன என்பதை அலசி ஆராய்ந்து நிதானமாக முடிவு எடுக்க வேண்டும்.  
அப்போதுதான் பங்குச் சந்தை முதலீட்டில் இழப்பை தவிர்க்க முடியும்.
உஷார் முதலீட்டாளர்களே உஷார்...!
 
- சேனா சரவணன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ