Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈரோட்டில் முதலீட்டு விழிப்பு உணர்வு..! குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் ஆபத்தானது..!

 
நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் -  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு என்கிற தலைப்பில்  ஈரோட்டில்  விழிப்பு உணர்வு கூட்டத்தை நடத்தின.  
 
 
முதலில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, வாழ்க்கை தேவைகளை கடன் வாங்கி, முதலீடு  செய்து - எப்படி  நிறைவேற்றுவது லாபகரமாக  என்பதை விளக்கி பேசினார்.
 
உலகின் எட்டாவது அதிசயம் என்று சொல்லப்படும் கூட்டு வளர்ச்சியின் சக்தி (பவர் ஆஃப் காம்பவுண்டிங்) எப்படி செயல்படுகிறது. முதலீடு செய்த பணம் எப்படி பன்மடங்கு பல்கி பெருகிறது, நம் பணம் நமக்காக எப்படி உழைக்கிறது என்பதை  உதாரணங்களுடன் விளக்கினார். 
 
அடுத்ததாக பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்  உதவி துணைத் தலைவர்  (முதலீட்டாளர் கல்வி )எஸ். குருராஜ், '' குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தருவதாக சொல்லும் முதலீட்டு திட்டங்கள் அனைத்தும் ஆபத்தானவை. 10,000 ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த ஆறு மாதத்தில் 20,000 கிடைக்கும் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்தால் அதோ கதி " என்றார். 
 
 
அவர் லிக்விட் ஃபண்ட், பேலன்ஸ்ட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் போன்றவற்றை வீடியோ மூலம் விளக்கினார்.    
 
முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றினார். '' நடுத்தர மக்கள் நீண்ட காலமாக நடுத்தர மக்களாக இருக்க காரணம், அவர்கள் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க தயக்கம் காடுவதுதான். உலகம் முழுக்க வெற்றிகரமான முதலீட்டாளர்கள் எல்லாம் ரிஸ்க் எடுத்துதான் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள்" என்றவர், அந்த ரிஸ்க்-ஐ தவிர்க்க முதலீட்டை எப்படி போர்ட்ஃபோலியோ அமைத்து மேற்கொள்ள வேண்டும் என்பதை உண்மை உதாரணங்களுடன் விளக்கி சொன்னார்.  
 
இறுதியாக முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர்.
 
''எப்போது லாபத்தை வெளியே எடுக்க வேண்டும் (பிராஃபிட் புக்கிங்)? என ஒரு முதலீட்டாளர் கேட்க, '' இது தேவையின் அடிப்படையில் அமைய வேண்டும். பணத் தேவைக்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் உங்களின் முதலீடு லாபகரமாக இருந்தால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாக இருந்தால் அதனை பேலன்ஸ்ட்  ஃபண்ட் அல்லது கடன் சார்ந்த பாதுகாப்பான முதலீட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். இப்படி பிராஃபிட் புக்கிங் செய்வதை சரி என்றோ, தவறு என்றோ சொல்ல முடியாது. அதேநேரத்தில், பணத் தேவைக்கு பல ஆண்டுகள் இருக்கும் நிலையில், முதலீட்டை பாதுகாப்பாக மாற்றினால் பவர் ஆஃப் காம்பவுண்டிங் மூலம் ஈக்விட்டி முதலீட்டில் கிடைக்கும் லாபம் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது." என பதில் அளிக்கப்பட்டது. 
 

பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஈரோட்டில் கிளை திறந்தது. இதை ஒட்டி நாணயம் விகடன் மற்றும் அதன் வாசகர்கள் சார்பாக கேக் வெட்டி,  பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை பாராட்டினோம். 

- சி.சரவணன்
படங்கள் ரமேஷ் கந்தசாமி
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ