Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபிஓ சந்தை: அதிகரிக்கும் முதலீட்டாளர்கள்!

 
ஐபிஓ சந்தையைப் பொறுத்தவரை அமோகமான வரவேற்பு முதலீட்டாளர்களிடையே இருக்கிறது. 
 
ஐபிஓ வெளியிடுவதில் மிக விரைவாக நிறுவனங்களும் செபியும் செயலாற்றி வருகின்றன. இதனால் முன்பை விட அதிக ஐபிஓக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் 2016ல் இதுவரை வெளியிடப்பட்ட ஐபிஓக்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி 2.9 பில்லியன் டாலரைக் கடந்துவிட்டது. 
 
 
இந்த ஆண்டு மேலும் 22 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட தயாராக இருக்கின்றன. இவை அனைத்தும் ஐபிஓ வெளியிடப்பட்டால் இந்த வருடத்தில் திரட்டப்பட்ட நிதி மொத்தம் 5.8 பில்லியன் டாலரை தாண்டும். 
 
கடந்த வருடம் 71 ஐபிஓக்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி 2.18 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ