Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தை முதலீடு... உயரும் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை!

 

பங்குச் சந்தையின் தொடர்ச்சியான பாசிட்டிவ் போக்கு, குறுகிய காலத்தில் ஐபிஓ-க்கள் தரும் நல்ல லாபம் போன்றவற்றால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த  சிறு முதலீட்டாளர்கள் சமீப காலமாக பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்கிறார்கள். 
 
 
டெப்பாசிட்டரி நிறுவனங்களான என்எஸ்டிஎல், சிடிஎஸ்எல் ஆகிய இரண்டு சேர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் 2015-16ல் மட்டும் 20 லட்சம் டீமேட் கணக்குகளைப் புதிதாக பதிவு செய்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களிலும் மொத்தமாக 2.53 கோடி டீமேட் கணக்குகள் உள்ளன. 
 
மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சிறு முதலீட்டாளர்களுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த வழியாக இருப்பதைக் காட்டுகிறது. மேலும் ஐபிஓ வந்து பட்டியலிடப்படும் நாட்களும் 12 நாளிலிருந்து 6 நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது  சிறு முதலீட்டாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ