Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர்ந்தது ஏற்றுமதி.. குறைந்தது இறக்குமதி.. இது செப்டம்பர் நிலவரம்!

நம் நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் 4.62 சதவிகிதம் உயர்ந்து 22.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 
 
 
இன்ஜினியரிங் மற்றும் ஆபரணங்கள் துறையில் ஏற்றுமதி அதிரடியாக உயர்ந்துள்ளதால் இந்தியாவின் ஏற்றுமதி செப்டம்பரில் அதிகரித்துள்ளது. இதில் பொறியியல் 6.51 சதவிகிதம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் 22.42 சதவிகிதம், கைவினைப் பொருட்கள் 23 சதவிகிதம், ஜவுளி 12.62 சதவிகிதம் மற்றும் இரசாயனங்கள் 6 சதவிகிதம் அடங்கும்.இதுவே 2015ம் ஆண்டு செப்டம்பர் நாட்டின் ஏற்றுமதி 21.8 பில்லியன் டாலராக இருந்தது. 
 
எனினும் இந்தியாவின் இறக்குமதி 2.54 சதவிகிதம் குறைந்து 31.22 பில்லியன் டாலராக சரிவடைந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை 8.33 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP