Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச சந்தையால் இந்திய சந்தை ப்ளாட்!

காலை 10.20 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (17.10.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
 
இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான செப்டம்பர் மாத பணவீக்கம் 3.57 சதவிகிதமாக குறைந்தது. இது இதற்கு முந்தைய மாதத்தில் 3.74 ஆக இருந்தது. அதைப்போல நுகர்வோர் விலை குறியீட்டு செப்டம்பரில் 4.31 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய மாதத்தில் 5.05 சதவிகிதமாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தை வாரத்தின் இறுதி நாள் சற்று உயர்வுடன் முடிவடைந்தது.
 
இந்த நிலையில் இன்று காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. எனினும் சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தையும் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 41.62 புள்ளிகள் உயர்ந்து 27,715.22 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.35 புள்ளிகள் குறைந்து 8,580.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 254.00 5.07
ஆக்சிஸ் வங்கி 528.90 1.58
எஸ்பிஐ 255.85 1.49
என்டிபிசி 146.90 1.31
பேங்க் ஆப் பரோடா 155.10 0.75 
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி ஏர்டெல் 297,10 -2,72
ஐடியா செல்லுலார் 73,50 -1,61
டெக் மஹிந்திரா 412,55 -1,56
ஜீ எண்டர்டெயின் 520,60 -1,49
எய்கர் மோட்டார்ஸின் 25,072.60 -1,29
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close