Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்.எஸ்.இ ஐபிஓ.


நாம் தினமும் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்கை வாங்குகிறோம்.  இப்போது அதே தேசிய பங்குச் சந்தையில் என்.எஸ்.இ-பங்கை வாங்கலாம். என்.எஸ்.இ-ன் ஐபிஓ, ஆஃபர் ஃபார் சேல் முறையில் வர இருக்கிறது. தற்போது என்.எஸ்.இ-ன் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு  போனஸ் பங்குகள், ஸ்டாக் ஸ்பிளிட் மற்றும் டிவிடெண்ட்கள் கொடுப்பதற்கும் என்.எஸ்.இ-ன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. 
 

அடுத்த சில வாரங்களில் இந்தியாவின் பங்குச் சந்தை நெறியாளரான செபியிடம் தன்னுடைய டிராஃப்ட் பிராஸ்பெக்டஸை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதோடு என்.எஸ்.இ வெளிநாடுகளிலும் பட்டியலிடப்படுவதற்கு அடுத்த ஏப்ரல் 2017-க்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கிறது. என்.எஸ்.இ நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் நெருக்கடியால் தான் இந்த ஐ.பி.ஓ வர இருக்கிறது. 

சிட்டி குரூப், மார்கன் ஸ்டான்லி, ஜே.எம். ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ், கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல் போன்ற நிறுவனங்களை மெர்ச்சென்ட் பேங்கர்களாக நியமித்திருக்கிறது என்.எஸ்.இ. அதோடு சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனம் சட்ட ஆலோசகராக நியமித்திருக்கிறது. என்.எஸ்.இ-ன் போட்டியாளரான பி.எஸ்.இ ஏற்கனவே செபியிடம் ஐபிஓ வருவது தொடர்பான டிராஃப்ட் பிராஸ்பெக்டஸை சமர்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP