Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாபத்தை அள்ளும் லட்சுமி விலாஷ் வங்கி.. 2ம் காலாண்டில் 45% வளர்ச்சி

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் லட்சுமி விலாஷ் வங்கியின் நிகர லாபம் 44.66 சதவிகிதம் உயர்ந்து ரூ.64.84 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
2016, செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் லட்சுமி விலாஷ் வங்கியின் நிகர லாபம் 44.66 சதவிகிதம் உயர்ந்து ரூ.64.85 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய நிதி ஆண்டில் ரூ.44.83 கோடியாக இருந்தது. 
 
 
படத்தின் நடுவில் லட்சுமி விலாஷ் வங்கியின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி
மற்றும் அதிகாரிகள். 
 
லட்சுமி விலாஷ் வங்கியைப் பொறுத்தவரை ரூ.93.40 கோடியாக இருந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் 69.61 சதவிகிதம் உயர்ந்து ரூ.158.42 கோடியாக அதிகரித்துள்ளது. ரூ.697.88 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருமானம் ரூ.830.30 கோடியாக அதிகரித்துள்ௐளது. வங்கியின் மற்ற வருமானம் ரூ.63.72 கோடியிலிருந்து 107 சதவிகிதம் உயர்ந்து ரூ.131.90 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த டெபாசிட் 13.80 சதவிகிதம் உயர்ந்து ரூ.26,680.14 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
அரையாண்டு செயல்பாட்டைப் பொறுத்தவரை வங்கியின் நிகர லாபம் 47.53 சதவிகிதம் உயர்ந்து ரூ.125.53 கோடியாக அதிகரித்துள்ளது. 2016-17ம் நிதி ஆண்டில் வங்கியின் மற்ற லாபத்தின் வளர்ச்சி 54.96 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் லட்சுமி விலாஷ் வங்கியின் பங்குகள் 0.36 சதவிகிதம் குறைந்து ரூ.151.20 என்ற நிலையில் நிறைவடைந்தது. 
 
சோ.கார்த்திகேயன்
 
படம்: சொ.பாலசுப்ரமணியன்
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ