Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி கூட்டம் தாக்கத்தினால் சந்தை உயர்வு!

காலை 10.10 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (18.10.16) காலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்று காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. எனினும் சர்வதேச சந்தை பலவீனமாக வர்த்தகமாகி வந்ததால் இந்திய சந்தையும் ப்ளாட் ஆக வர்த்தகமாகி இறுதியில் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 
 
இன்று ஆசிய சந்தைகள் பலவீனமாக வர்த்தகமாகி வருகின்ற போதிலும் இந்திய சந்தை அதிகரித்து காணப்படுகிறது. ஏனெனில் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி மசோதா  வரி விதிப்பு குறித்த இரண்டு நாள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது. இதன் தாக்கத்தினால் இந்திய சந்தை அதிகரித்து காணப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 241.99 புள்ளிகள் உயர்ந்து 27,770.82 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 71.70 புள்ளிகள் உயர்ந்து 8,591.50 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 423.45 3.08
ஜீ எண்டர்டெயின் 517.35 2.92
ஹெச்டிஎப்சி 1,327.10 1.93
ஆரோபிந்தோ பார்மா 823.95 1.79
ஐசிஐசிஐ வங்கி 262.65 1.51
 
விலை குறைந்த பங்குகள்
 
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,170.10 -1,03
பார்தி ஏர்டெல் 299,75 -0,51
பிபிசிஎல் 656,05 -0,46
ஐடியா செல்லுலார் 72,05 -0,28
ஏசிசி 1,602.20 -0,16
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ