Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரிச் சுமையை சமாளிக்க எளிய வழி - இ.எல்.எஸ்.எஸ்!

 

 
இ.எல்.எஸ்.எஸ் :
 
இது ஒரு டைவர்ஷிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட். இந்த ஃபண்ட் மூலம் திரட்டப்படும் பணம் பெரும்பாலும் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்யப்படும். சிறிய அளவு பணம் மட்டும் தான் கடன் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். 
 
 
லாக் இன் காலம் :
 
பொதுவாக நம் வரிச் சுமையை குறைக்க வரிக்கு உட்பட்ட வருமானத்தை 80சி  பிரிவின் கீழ் பிராவிடென்ட் ஃபண்டிலோ - பிபிஎஃப், தேசிய சேமிப்பு சான்றிதழ்களிலோ - என்.எஸ்.சி, யூலிப் திட்டங்களிலோ, 5 வருட வங்கி எஃப்.டியாகவோ, என்பிஎஸ் திட்டத்திலோ போட்டு வைக்கலாம். 
 
ஆனால் இதற்கும் இ.எல்..எஸ்.எஸ் திட்டத்திற்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. அது தான் லாக் இன் காலம். மேற்கூறிய எல்லா திட்டங்களிலும் இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களை விட கூடுதலான காலங்களே லாக்-இன் காலங்களாக இருக்கின்றன. இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் லாக் இன் வெறும் 3 வருடங்கள் தான்.  அதற்குப் பிறகு பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். 
 
எஸ்.ஐ.பி அல்லது மொத்த தொகை :
 
இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் மொத்த தொகையாகவோ அல்லது எஸ்.ஐ.பி முறையிலோ நமக்கு வசதியான முறையில் செலுத்தலாம்.  குறைந்தபட்ச எஸ்.ஐ.பி தொகை 500 ரூபாய். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

வரிச் சலுகை :
 
இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான சான்றுகளை ஸ்டேட்மென்ட்களோடு கொடுத்தால் நம்முடைய ஃபார்ம் 16-ல் கணக்கு காட்டப்பட்டு வரிச் சலுகை கிடைக்கும்.
 
டீமேட் அவசியம் இல்லை :
 
எல்லா மியூச்சுவல் ஃபண்ன்டை போலவே நேரடியாக ஒரு நல்ல நிதி ஆலோசகரிடமோ அல்லது நமக்கே மியூச்சுவல் ஃபண்ட் பற்றி போதுமான அறிவு இருந்தால் நாமே நேரடியாகவோ முதலீடு செய்து கொள்லலாம். தற்போது ஆன்லைனில் கூட இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம் இல்லை. 
 
- மு.சா.கெளதமன்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close