Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊனத்தையும் மீறி சாதனை படைத்தவர்களின் வெற்றிகளைக் கொண்டாட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

 
அபாரமாக சாதனைகளைப் புரிந்துள்ள  ஊனமுற்றவர்களுக்கான 15-வது கவின்கேர்  எபிலிட்டி விருதுகளுக்கான பரிந்துரைகளை இந்த அமைப்பு வரவேற்கிறது. இந்த விருதுகள் எஃப்.எம்.சி.ஜி. ஜெயின்ட் கவின்கேர் மற்றும் தேசம் முழுவதும் உள்ள ஊனமுற்றோர் உரிமை அடிப்படையிலான அரசு சார்பில்லாத அமைப்பு எபிலிட்டி ஃபவுண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்கின்றது. இங்குத் தங்கள் தடைகளை மீறி வெற்றிகளை சாதிக்கும்  ஊனமுற்றோருக்கு அங்கீகாரமும் கவுரவமும் அளிக்கப்படுகின்றன. 
 
 
கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2003-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. திறமையான  ஊனமுற்றோரைக் கண்டறிந்து, அவர்களின் சாதனைகளை வெளிப்படுத்துவதையும் அவர்களைக் குறித்த வழக்கமான கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட விருது இது. இத்தனை ஆண்டுகளாக, ஒருவர் தனது தனிப்பட்ட  குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கும் இலக்கை வகுத்துக்கொள்ளவும், மனிதராக இருப்பதன் பொதுத்தன்மையை மற்றவர்களோடு சேர்ந்து கொண்டாடுவதற்குமான அமைப்பாக இந்த விருதுகள் மாறியுள்ளன. 
 
விருப்ப மனுக்களுக்கான அழைப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது! பரிந்துரைகளை (Nomination) அனுப்பிவைப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 15, 2016. தங்களுக்கு விருப்பமான களத்தில் அசாதாரண சாதனை புரிந்துள்ள, இந்தியக் குடிமகனாக உள்ள எந்த ஒரு ஊனமுற்றவரும் (ஊனமுற்றவர்களுக்கான சட்டம்,1995) இதில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்தான். முதல் கட்டமாகத் தேர்ந்தெடுத்தல், அவரவர் இடத்திற்கு வந்து பார்த்தல் ஆகியவற்றுக்குப் பின் இறுதியாக நடுவர்கள் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் தகவல்களைப் பெறவும் உங்கள் விருப்ப மனுக்களை அனுப்பவும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளில் அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளவும்.  
 
www.cavinkare.com  அல்லது  www.abilityfoundation.org  அல்லது +91 8939675544.   
 
கவின்கேர் எபிலிட்டி விருதுகள் மொத்தம் நான்கு விருதுகளை உள்ளடக்கியது. கடிணமான சூழல்கள் மற்றும் பாதிப்புகளைச் சந்தித்துத் தனிப்பட்ட முறையில் சாதனை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. அனைத்து தடங்கல்களையும் தாண்டிப் போராடி அசாதாரண உயரத்திற்கு தன்னை உயர்த்திக்கொண்ட ஒரு தனி நபரின் போராட்டக் குணத்தை இந்த விருது போற்றுகிறது. 
 
மேம்பட்ட நிலையை அடைந்தவருக்கான (Eminence)கவின்கேர் எபிலிட்டி அவார்ட்: அசாதாரண  சாதனை படைத்துள்ள ஊனமுள்ள ஒரே ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தன் குறைபாடுகளைத் தாண்டி சாதித்தது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க வகையில் சொந்தமாக ஒரு அமைப்பை நிறுவித் தாங்கள் சமூகத்துக்கும் பங்களிப்பை வழங்கியவரை இந்த விருது கௌரவித்துப் பெருமை கொள்கிறது.  இந்த விருது, சான்றிதழ், ஒரு டிராஃபி மற்றும் ரொக்கப் பரிசு ரூ. 2 லட்சம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 
பண்பட்ட தேர்ச்சிக்கான(Mastery)கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: தாங்கள் விருப்பப்பட்ட துறைகளில் – கலைகள், திரைப்படம், மருத்துவம், அறிவியல், தொழில், தொழில்நுட்பம், கல்வி, சமூக மேம்பாடு, மனித உரிமைகள், விளையாட்டு உள்ளிட்ட எந்தத் துறையிலும் - ஊனமுற்றவர்கள் நிகழ்த்திய அசாதாரண சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மூன்று பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது சான்றிதழ், ஒரு டிராஃபி மற்றும் ரொக்கப் பரிசு ரூ. 1 லட்சம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ