Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராக்கெட் வேகத்தில் சென்செக்ஸ்.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய சந்தை

 

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (18.10.16) மாலை நேர வர்த்தகத்தில் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்று காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவீனமாக வர்த்தகமாகி வருகின்ற போதிலும் இந்திய சந்தை அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 208 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 143.63 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 207.64 புள்ளிகள் உயர்ந்து 27,737.61 புள்ளிகளாக இருந்தது. ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் வங்கித் துறை போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 55.15 புள்ளிகள் அதிகரித்து 8,575.55 புள்ளிகளாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே 500 புள்ளிகள் வரை அதிகரித்து நிறைவடைந்தது.
 
இன்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 
நிஃப்டி 8,540 புள்ளிகள் என்ற லெவலில் நல்ல சப்போர்ட்டாக உள்ளது. ஆகையால் முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங்க் செய்த காரணத்தினாலும், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ போன்ற வங்கி பங்குகள் அதிகரித்த காரணத்தினாலும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தினால் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மூலதன பொருட்கள் நிறுவனங்கள் பங்குகள் விலை உயர்ந்த காரணத்தினாலும், சர்வதேச சந்தை சாதகமாக வர்த்தகமான காரணத்தினாலும் இன்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 520.91 புள்ளிகள் உயர்ந்து 28,050.88 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 157.50 புள்ளிகள் உயர்ந்து 8,677.90 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அதானி போர்ட்ஸ் 267.00 6.48
ஐசிஐசிஐ வங்கி 270.35 4.48
ஹெச்டிஎப்சி 1,355.25 4.09
டெக் மஹிந்திரா 425.10 4.05
டாடா ஸ்டீல் 424.95 3.44
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல்  355,35 -1,14
ஓஎன்ஜிசி 276,50 -0,70
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,174.50 -0,66
பிபிசிஎல் 656,75 -0,36
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ