Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாப நோக்கில் பங்குகள் விற்பனையால் சரிந்த சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (19.10.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
 
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் வங்கி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வந்ததால் சந்தை இறக்கத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் மதிய வர்த்தகத்திற்கு பிறகு ஐரோப்பிய சந்தை பலவீனமாக வர்த்தகமாகி வந்த காரணத்தினாலும், நேற்று சந்தை கடந்த ஐந்து மாதத்தில் இல்லாத அளவாக அதிகரித்து காணப்பட்டதால் இன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 66.51 புள்ளிகள் குறைந்து 27,984.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.80 புள்ளிகள் குறைந்து 8,659.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 76.30 4.81 
பி.எச்.இ.எல் 141.25 3.71
டாடா பவர் 81.25 3.17
விப்ரோ 495.00 2.54
லூபின் 1,512.70 2.13
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடிசி 239,45 -2,64
ஐசிஐசிஐ வங்கி 265,05 -1,96
ஹீரோ மோட்டோகார்ப் 3,361.95 -1,39
ஹெச்யூஎல் 846,00 -1,12
ஜீ எண்டர்டெயின் 508,35 -1,12
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ