Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோசடி போன் காலுக்கு... வங்கி மேலாளரே ஏமாந்த கதை...!

டையாரில் வசிக்கும் எஸ்பிஐ வங்கியிலிருந்து ஓய்வுபெற்ற ஜெயகோபாலன் அவர்களுக்கு ஞாயிறு அன்று தொடர்ந்து ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிய ஜெயகோபலனுக்கு இப்படி நாம் ஏமாறுவோம் என்பது தெரிந்திருக்கவில்லை. 

போனில் பேசியவர் நொய்டாவிலுள்ள எஸ்பிஐ வங்கியிலிருந்து பேசுவதாகச் சொன்னதுடன், ஜெயகோபாலனின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் முடக்கப்பட்டிருக்கிறது என்று என்ற தகவலையும் சொல்லி இருக்கிறார். 

சிறிதும் யோசிக்காத இவர் பதட்டத்தில் இப்போது என்ன செய்வது என்று கேட்டுள்ளார். போனில் பேசிய நபர் கணக்கு குறித்த விவரங்களை எல்லாம் கேட்டுள்ளார். கார்டில் உள்ள 16 இலக்க எண், எக்ஸ்பைரி தேதி மற்றும் வருடம், பின்னால் இருக்கும் சிவிவி எண் என அனைத்தையும் கேட்க கேட்க ஒவ்வொன்றாகச் சொல்லியிருக்கிறார்.

பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள ஒன் டைம் பாஸ்வேர்டை சொல்லுமாறும் கேட்டிருக்கிறார். அதையும் கொடுத்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அவர் கணக்கில் இருந்த ரூ. 3 லட்சம் அபேஸ்.

வங்கியில் பணிபுரிந்த அனுபவம் இருந்தும், அவருக்கு வங்கிக் கணக்கு குறித்த ரகசிய விவரங்களை, வங்கியிலிருந்தே பேசுவதாகச் சொன்னாலும் பகிர்ந்துகொள்ள கூடாது என்பது தெரியவில்லை.

ஒரு வங்கியாளருக்கு இந்த நிலை என்றால், மற்றவர்களுக்கு?

எப்படி தப்பிப்பது:

1. டெபிட், கிரெடிட் கார்டு முடக்கப்பட்டதை சரி செய்ய கூடுமான வரை வங்கி அலுவலகத்தை அணுகி சரி செய்துகொள்வது நல்லது.

2. அடித்து கேட்டாலும் தெரியாத யாரிடமும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிரக் கூடாது. தெரிந்தவர்களிடமும் நம்பகமான ஆட்களைத் தவிர யாரிடமும் பகிராதீர்கள். 

3. அதேபோல் பிறர் முன்னிலையில் கார்டுகளை பயன்படுத்தும் போது உஷாராக இருங்கள். 

4. ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அருகில் இருப்பவர்களுக்கு தெரியாத வகையில் ரகசிய எண்ணை பதிவிடுங்கள்.

5. கார்டுகளைத் தவறவிட்டால் உடனே வங்கியைத் தொடர்பு கொண்டு அதனை முடக்கி விடுங்கள். 

6. மொபைல், மெயில் போன்றவற்றில் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேமித்து வைக்காதீர்கள்.

- ஜெ.சரவணன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ