Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய, அமெரிக்க சந்தையால் இந்திய சந்தை ஏற்றம்

காலை 10.25 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (20.10.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 
நேற்று முன்தினம் இந்திய பங்குச் சந்தை கடந்த ஐந்து மாதத்தில் இல்லாத அளவாக அதிகரித்து காணப்பட்டதால் நேற்று முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை இறக்கத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச மற்றும் ஆசிய சந்தை எழுச்சியுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஆசிய சந்தையைப் பொறுத்தவரை சீனாவின் ஜிடிபி எதிர்பார்த்ததைப்போலவே அதிகரித்து காணப்பட்டதாலும், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்த காரணத்தினால் இன்று இந்திய சந்தை அதிகரித்து காணப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் பொறுத்தவரை சென்செக்ஸ் 181.36 புள்ளிகள் உயர்ந்து 28,170.35 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 52.55 புள்ளிகள் உயர்ந்து 8,711.40 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 275.80 4.06
ஐடியா செல்லுலார் 78.60 3.01 
பார்தி இன்ப்ராடெல்  368.55 2.90
அதானி துறைமுகங்கள் 278.80 2.65
ஹெச்டிஎப்சி 1,364.00 1.63
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹெச்சிஎல் டெக் 819,75 -1,30
கெயில் 433,80 -0,52
டாடா மோட்டார்ஸ் (டி) 359.90 -0.37
சிப்லா 594,40 -0,33
லார்சன் 1,486.60 -0,30
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close