Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தை!

காலை 9.50 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (21.10.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
நேற்று ஆசிய சந்தையைப் பொறுத்தவரை சீனாவின் ஜிடிபி எதிர்பார்த்ததைப்போலவே அதிகரித்து காணப்பட்டதாலும், நேற்று முன்தினம் வர்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்த காரணத்தினால் நேற்றைய இந்திய சந்தை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று சந்தை மந்தமாகத் தொடங்கியுள்ளது. காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 6.99 புள்ளிகள் குறைந்து 28,122.85 என்ற நிலையிலும், நிஃப்டி 9.20 புள்ளிகள் உயர்ந்து 8,708.60 என்ற நிலையிலும் வர்த்தகமானது.
 
தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 85.38 புள்ளிகள் குறைந்து 28,044.46 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 20.30 புள்ளிகள் உயர்ந்து 8,678.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச்சிஎல் டெக் 840.35 3.04
கெயில் 448.00 1.97
ஜீ எண்டர்டெயின் 527.85 1.46
டிசிஎஸ் 2,420.15 0.79
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,102.25 0.76
 
விலை குறைந்த பங்குகள்
 
ஹெச்டிஎப்சி 1,340.35 -1,44
ரிலையன்ஸ் 1,073.15 -1,32
ஆக்சிஸ் வங்கி 533,10 -1,29
ஹிண்டால்கோ 153,40 -1,19
அம்புஜா சிமென்ட்ஸ் 250,20 -1,13
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ