Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிலையன்ஸ் லாபம் ரூ.7,704 கோடியாக அதிகரிப்பு

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.7,704 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
 
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல்ஸ் வர்த்தகம் வளர்ச்சியடைந்த காரணத்தினாலும், இந்நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிறுவனம் பீப்பாய் ஒன்றுக்கு 10.1 டாலர்  வரை வருவாய் ஈட்டி வருவதாலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது. 
 
முந்தைய நிதி ஆண்டை ஒப்பிடும்போது, செப்டம்பரில் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 43 சதவிகிதம் உயர்ந்து, ரூ.7,206 கோடியாக அதிகரித்துள்ளது. முழுமையான லாபம் 18.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.7,704 கோடியாக அதிகரித்துள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ