Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் ஐபிஓ : முதலீடு செய்யலாமா?

 
பஞ்சாப் நேஷனல் பேங்க்-ன் துணை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ். இது இந்தியாவின் 5-வது பெரிய ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம். அதோடு இந்த நிறுவனத்தின் வாராக் கடன்களும் டாப் 5 நிறுவனங்களில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
 
 
பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் வரும் அக்டோபர்  25 முதல் 27  அன்று வரை புதிதாக பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்குகிறது.  இந்த நிறுவனம் ஐபிஓ மூலம் 3,000 கோடி ரூபாய் திரட்ட இருக்கிறது.  750 - 775 ரூபாயாக  பங்கு விலைப் பட்டை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

 

ஒரு லாட்டுக்கு 19 பங்குகள்.  முதலீடு செய்ய விரும்புபவர்கள் லாட் கணக்கில் தான் வாங்க வேண்டும். இந்த ஐபிஓ-க்கு கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல், டி.எஸ்.பி மெரில் லிங்ச், ஜே.எம் ஃபைனான்ஷியல் செக்யூரிட்டீஸ், ஜேபி மார்கன் இந்தியா, மார்கன் ஸ்டான்லி இந்தியா ஆகிய நிறுவனங்கள் லீட் மேனேஜர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றன

 

இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்யலாமா என்று ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். 

 

" பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் சுமாராக 60 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. அதோடு இந்த நிறுவனத்தின் கடனில் 70 சதவிகிதம் வீட்டுக் கடன்களாகவும், மீதி மற்ற கடன்களாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாராக் கடன்கள் 0.22 சதவிகிதம் இருப்பது பெரிய சாதகம். இந்த நிறுவனத்தின் வாராக் கடன்கள் வரும் ஆண்டுகளில் அதிகரித்தால் கூட ஹவுசிங் ஃபைனான்ஸ் துறையின் சராசரி அளவுகளுக்கு மட்டுமே உயரும் என்று எதிர்பார்க்கலாம். 
 
மிக முக்கியமாக, இந்த நிறுவனத்தின் வீட்டுக் கடன்கள் டயர்  2 நகரங்களில் இருந்து அதிகம் வருவதால், கடன் தொகை குறைவாகவே இருக்கிறது. எனவே வாராக் கடனுக்கான ரிஸ்க் குறைகிறது. இவர்கள் கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் கொடுத்திருக்கும் மொத்த கடனில் சுமாராக 11 - 13 சதவிகித கடன் தொகை மட்டுமே ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதி  சிறு கடன்களாக  கொடுக்கப்பட்டிருக்கிறது. 

 

கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற கடன்களில் சொத்துக்கு எதிராக கொடுக்கப்பட்ட கடன்கள் 60 சதவிகிதத்திற்கு மேல் இருக்கின்றன.

 

அதோடு இந்த நிறுவனத்தி புத்தக மதிப்பிற்கும், விலைக்குமான விகிதாச்சாரம் (Price to Book value) 2.35 - 2.50 ஆக இருக்கிறது. இது ஒரு நல்ல மதிப்பீடு தான். எனவே இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம் " என்று முடித்தார் பிரபாகர்.  
 
மு.சா.கெளதமன்
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ