Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்வ மகள் சேமிப்பு திட்டக் கணக்கை எந்த வங்கியில் திறக்கலாம்!

 

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கான சேமிப்புத் திட்டமாக சுகன்யா சம்ரிதி திட்டம் அமைந்துள்ளது. இதனைத் தமிழில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்கிறார்கள். இதில் முதலீட்டுக்கு வரிச் சலுகை (80சி பிரிவு) இருக்கும் அதேநேரத்தில், வருமானத்துக்கு வரி கட்டத் தேவையில்லை. 18 வயதில் கல்விச் செலவுக்காக 50% தொகையையும், மீதித் தொகையைத் திருமணத்தின்போதும் பெற்றுக்கொள்ளலாம். 
 
 
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் கணக்கைத் தொடங்கலாம். உங்களுடைய மகளின் செல்வ மகள் சேமிப்பு திட்டக் கணக்கை கீழே குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் திறக்கலாம். 
 
அதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட்  பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி என அஞ்சல் அலுவலகம் தவிர்த்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள 28 வங்கிகளில் கணக்கை திறக்கலாம். 

- சோ.கார்த்திகேயன் 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ