Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் ஆலோசகர்களாக செயல்பட முடியாது - செபி வரைவு திட்டம்

இனி மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் (டிஸ்ட்ரிபியூட்டர்கள்), ஆலோசகர்களாக இருக்க முடியாது என  இந்தியாவின் பங்குச் சந்தையின் நெறிமுறையாளரான செபி, ஒரு புதிய திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. 
 
 
 
அந்த புதிய அறிவிப்பின் படி நிதி சம்பந்தப்பட்ட திட்டங்கள், மியூச்சுசல் ஃபண்ட், முதலீட்டுத் திட்டங்களை விநியோகிபவர்கள் (டிஸ்ட்ரிபியூட்டர்கள்), தங்களை அடுத்த 3 வருடத்திற்குள் பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களாக (Registered Investment Advisor) தேர்வு எழுதி பதிவு செய்து கொள்ள வேண்டும்.  
பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்களாக இருப்பவர்கள், ஃபண்டை விற்பதன் மூலம் (Distribute) எந்த கமிஷன் தொகையையும் பெறக் கூடாது. வழங்கும் ஆலோசனைகளுக்கு நேரடியாக முதலீட்டாளர்களிடமிருந்து கட்டணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும்.  அதே நேரத்தில் டிஸ்ட்ரிபியூட்டர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் முதலீட்டு ஆலோசனைகளை கொடுக்கக் கூடாது என்று சில திருத்தங்களை முன் வைத்திருக்கிறது.
 
தமிழகத்தின் நிலை :
 
கடந்த செப்டம்பர் 2016 நிலவரப்படி மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 16,10,729 கோடி ரூபாய் இந்தியா முழுவதுக்கும்  நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழகத்தின் பங்கு  மட்டும் 77,700 கோடி ரூபாய். இது மொத்தம் நிர்வகிக்கப்படும் தொகையில் 4.8%. தமிழகத்தில் இருந்து செய்யப்படும் முதலீடுகளில் 33% முதலீடுகள் ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளிலும், 67 சதவிகித ஃபண்டுகள் ஈக்விட்டி அல்லாத ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படுகிறது என்பது ஆம்ஃபி (AMFI) தகவல். 
 
இது ஒரு வரைவு தான். நவம்பர் 4 ம் தேதி வரை,  கருத்து தெரிவிக்கச் சொல்லி இருக்கிறது செபி. அதன் பிறகு தான் செபி, தன் முழுமையான திருத்தத்தை வெளியிடும். தற்போது டிஸ்ட்ரிபியூட்டர்களாக இருப்பவர்கள், அடுத்த 3 வருடத்திற்குள் அதாவது 2020 ஜனவரிக்குள் செபியின் தேர்வில் தேர்ச்சி பெற்று முதலீட்டு ஆலோசகர்களாக தரம் உயர்த்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 
 இந்தியாவில் சுமாராக 1 கோடி மியூச்சுவல் ஃபன்ட் முதலீட்டாளர்களும், 5 கோடி ஃபோலியோக்களும் மட்டுமே இருக்கின்றன. இது இன்னும் பல மடங்கு பெருக வேண்டி இருக்கிறது. 
 
இந்திய அளவில் தமிழகம் சமீப காலமாக தான் மியூச்சுவல் ஃபண்டில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. பல டிஸ்ட்ரிபியூட்டர்கள் தான் தமிழகத்தில் இருந்து மியூச்சுவல் ஃபண்டில் பெரிய அளவிலான தொகைகளை கொண்டு வந்திருக்கிறார்கள்.
 
இன்றைய தேதிக்கு, தமிழகத்தில் வெறும் 14 பேர் தான் செபி பதிவுபெற்ற நிதி ஆலோசகர்களாக இருக்கிறோம். இந்த 14 பேரால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்ட தொகையை விட டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் இருந்து மியூச்சுவல் ஃபண்டில் வரும் தொகை மிக அதிகம், சொல்லப்பபோனால் தமிழகத்தின் ஆணிவேரே டிஸ்ட்ரிபியூட்டார்கள் தான்.  
 
தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த துறை இருக்கும் நிலையில் மிக முக்கியமாக இந்தியா முழுமைக்கும் செயல்பட்டு வரும் டிஸ்ட்ரிபியூட்டர்களை பிரச்னைக்கு உள்ளாக்குவது, இந்திய நிதி மற்றும் முதலீட்டு துறைக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல என்றே தோன்றுகிறது. 
 
மு.சா. கௌதமன்
 
மிக விரிவான கட்டுரைக்கு நடப்பு இதழ் (அக்டோபர் 23, 2016 கடைகளில் கிடைக்கும் இதழ்) பார்க்க
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ