Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல்டு பாண்ட் முதலீடு விற்பனை நவம்பர் 2 கடைசி நாள்..!

 

 
 மத்திய அரசு தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND)  விற்பனையை இன்று (அக்டோபர் 24, 2016) தொடங்கி இருக்கிறது. 
 
இந்த பாண்டுகளில் நவம்பர் 2, 2016 வரை முதலீடு செய்யலாம். 
 
தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள்,  பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன
 
 
 
10 கிராம் தங்க பாண்டு முதலீட்டுக்கு ரூ.500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமம்  கூட வாங்கலாம். அதற்கும் இந்த தள்ளுபடி (கிராமுக்கு ரூ.50) கிடைக்கும்.. 
 
முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.
 
இந்த கோல்டு பாண்டு பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக  கொடுக்க மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணம் தருவார்கள்.
 
கோல்டு பாண்டு முதலீட்டுக்கு  மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.  
 
கோல்டு பாண்டில் ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு  தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.5% வட்டி  கிடைக்கும். 
 
- சேனா சரவணன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ