Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் வருகிறது 2,000 ரூபாய் நோட்டு!

 
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்குக் கொண்டு வர உள்ளது. 
 
இந்திய நாணய புழக்க சந்தையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதால் 2,000 ரூபாய் நோட்டைக் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது 
 
 
இதுவரை இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 1,000 ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் 2,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் மைசூரில் அச்சிடப்பட்டன. மைசூரில் உள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடும் அச்சகத்தில் இதற்கான அனைத்துப் பணிகளை முடிந்துவிட்ட நிலையில் அடுத்தச் சில வாரங்களில் இதனை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 
 
1938 மற்றும் 1954ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி 10,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகளை அச்சிட்டது, 1946 மற்றும் 1978ம் ஆண்டு அதன் புழக்கத்தை ரிசர்வ் வங்கி முடக்கியது குறிப்பிடத்தக்கது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ