Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுத்துறை பங்குகளால் சதமடித்த சென்செக்ஸ்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (24.10.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
இன்று காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்ததால் இந்திய சந்தைகள் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஜப்பான் செப்டம்பர் மாதத்தில் தனது தொழில்துறை உற்பத்தி மற்றும் வர்த்தக சமநிலை அதிகரித்ததால் ஆசிய சந்தைகள் அதிகரித்து காணப்பட்டது. 
 
இதுமட்டுமின்றி ஐரோப்பிய சந்தை எழுச்சியுடன் வர்த்தகமானதாலும், பொதுத்துறை, வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் விலை அதிகரித்ததால் இன்றைய மாலை நேர முடிவில் சந்தை அதிகரித்து நிறைவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 101.90 உயர்ந்து 28,179.08 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.90 புள்ளிகள் உயர்ந்து 8,708.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
ஓஎன்ஜிசி 292.35 4.49
டாடா மோட்டார்ஸ் 559.80 2.81
பிபிசிஎல் 686.20 2.69
ஐசிஐசிஐ வங்கி 284.55 2.58
கோல் இந்தியா 321.25 2.54
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 76,80 -4,00
விப்ரோ 483,95 -3,05
ஹெச்சிஎல் டெக் 810,65 -2,54
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,127.50 -2,25
ஜீ எண்டர்டெயின் 512,05 -2,07
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP