Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கம்! இடைக்கால தலைவராகிறார் ரத்தன் டாடா

டாடா சன்ஸ் நிறுவனம் இன்று அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று மும்பையில் நடைபெற்ற இந்நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் டாடா குழுமத்தின் தலைவராக இருக்கும் சைரஸ் மிஸ்திரியை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். 
 
 
இந்த நிலையில் டாடா சன்ஸ் நிர்வாகக் குழு புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஒரு தேர்வு குழுவை அமைத்துள்ளது. டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் ரத்தன் டாடா, வேணு சீனிவாசன், அமித் சந்திரா, ரோனன் சென் மற்றும் குமார் பட்டாச்சார்யா போன்றோர் உள்ளனர். இந்த குழு அடுத்த நான்கு மாதங்களில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். 
 
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP