Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சைரஸ் மிஸ்திரி நீக்கம் எதிரொலி.. இறக்கத்தில் டாடா குழும பங்குகள்!

காலை 10.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (25.10.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 
 
நேற்றைய சந்தையில் ஆசிய சந்தைகள் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமானதாலும், பொதுத்துறை, வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் விலை அதிகரித்ததால் மாலை நேர முடிவில் சந்தை அதிகரித்து நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சந்தை ப்ளாட் ஆக ஓபன் ஆனது. எனினும் நேற்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். இதன் தாக்கத்தினால் இன்று காலை நேர வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா மோட்டர்ஸ் போன்ற டாடா குழும பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.  
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 141.43 குறைந்து 28,037.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 38.30 புள்ளிகள் குறைந்து 8,670.65 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
டெக் மஹிந்திரா 434.50 1.25
ஆரோபிந்தோ பார்மா 828.65 1.25
பார்தி இன்ப்ராடெல் 374.15 1.18
ஐசிஐசிஐ வங்கி 287.30 0.97
சிப்லா 589.80 0.87
 
விலை குறைந்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 415,00 -2,59
டாடா பவர் 82,15 -1,79
ஹிண்டால்கோ 148,40 -1,62
டாடா மோட்டார்ஸ் (டி) 358.10 -1.51
பிபிசிஎல் 676,15 -1,46
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ