Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சதவிகிதத்தை முடிவு செய்வதில் என்ன சிக்கல்?

2017 ஏப்ரல் 1 ம் தேதி எப்படியாவது ஜிஎஸ்டியை அமலுக்கு கொண்டுவந்து விட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது மத்திய அரசு. இதற்காக கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி ஆலோசித்தது. இதில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு 6%, 12%, 18% மற்றும் 26% என நான்கு வகையாக விதிக்க முடிவு செய்யப்படலாம் என்கிற கருத்து முன் வைக்கப்பட்டது. 
 
 
அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியும், ஆடம்பர பொருட்கள், புகையிலை, சிகரெட், மது போன்றவற்றுக்கு அதிகபட்ச வரியும் விதிக்கலாம் என  மத்திய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. ஏனெனில் ஜிஎஸ்டி வரி விதிப்பு சதவிகிதத்தை முடிவு செய்வதில் குழப்பங்கள் உள்ளன. எல்லா பொருட்களும், சேவைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. அதே சமயம் உற்பத்தி மற்றும் விற்பனையின் செயல்முறைகளும் மாறுபடும். எந்த அளவுகோலின் அடிப்படையில் வரி விதிப்பு சதவிகிதத்தை முடிவு செய்வது என்பதில் சிக்கல் இருக்கிறது. மேலும் ஜிஎஸ்டியினால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், மத்திய அரசு மாநிலங்களுடன் இணக்கமான முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. எனவே இறுதி முடிவு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close