Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செப்டம்பரில் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் வாங்கிய விற்ற பங்குகள் பற்றி சொல்லுங்களேன்?

 

கடந்த மார்ச் மாதத்திலிருந்து சந்தை நன்றாக ஏற்றம் காண ஆரம்பித்தது. ஆனால் செப்டம்பரில் சற்று தொய்வு ஏற்பட்டதும் ஃபண்ட் மேனேஜர்கள் தங்களது மிட்கேப் போர்ட்ஃபோலியோக்களை மாற்றி அமைக்க, பங்குகளை விற்று லாபத்தை எடுத்தனர்.
 
 
 
குறுகிய காலத்தில் ஏற்றமடைந்த பங்குகளை பெரும்பாலும் விற்று வெளியேறினர். ரிலையன்ஸ், யூடிஐ மற்றும் கோட்டக் உள்ளிட்ட  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சியட் பங்குகளை விற்று  லாபம் எடுத்தனர். ரிலையன்ஸ் மற்றும் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கூடுதலாக பாரத் ஃபைனான்ஷியல் பங்குகளையும் விற்று லாபம் பார்த்தனர். சில ஃபண்ட் நிறுவனங்கள்  அல்கெம் லேப், டாக்டர் லால் பாத்லேப் மற்றும் அட்வான்ஸ்ட் என்சைம் டெக் உள்ளிட்ட பங்குகளில் லாபத்தை எடுத்தனர். 
 
வாங்கிய பங்குகள் என்று பார்த்தால் நவ் பாரத் வென்சர்ஸ், அசோகா பில்ட்கான் மற்றும் டால்மியா பாரத் போன்றவை அடங்கும். லார்ஜ் கேப் பங்குகளில் கேஸ்ட்ரால் பங்குகளை ஐசிஐசிஐ புருடென்சியல், ரிலையன்ஸ், யூடிஐ, ஐடிஎஃப்சி மற்றும் கோட்டக் உள்ளிட்ட ஃபண்ட் நிறுவனங்கள்  வாங்கியுள்ளனர். ஜீ என்டர்டெயின், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. ஃபைனான்ஸ், ஐடி, எஃப்எம்சிஜி பங்குகளில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ