Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை... வணிக வரித் துறையை எதிர்த்து போராட்டம்!

 

மதுரை வணிகவரித்துறை அலுவலகத்தில் வணிகவரித் துறை அதிகாரிகளை கண்டித்து வணிகர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். வணிக வரி என்ற பெயரில் தங்கள் சுயநலனுக்காக தேவையற்ற வரிகளை சட்ட விதிக்கு மாறாக விதித்து தங்களை வியாபாரத்தில் இருந்து கிழே தள்ளுவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
 
 
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மாவட்ட தலைவர் செல்லமுத்து கூறுகையில், ''மொத்த வியாபாரிகளிடம் வரி இல்லாத பொருளுக்கு வரி வசூல் செய்கின்றனர். உதாரணத்துக்கு, மிளகாய் வத்தளுக்கு வரி கிடையாது ஆனால் அதற்கு வரியிட்டு வருகிறார்கள். 
 
எனக்கு தெரிந்த ஒரு இரும்பு வியாபாரி மின்சார துறையில் இருந்து டெண்டர் மூலம் இரும்புகளை வாங்கினார். அவர் அப்போது வரிகளை அனைத்தையும் கட்டிவிட்டார். ஆனால், வெளியில் வந்து அதனை விற்கும்போது அதற்கு மீண்டும் வரியை வணிகவரித் துறை மூலம் வரி வாங்குகிறார்கள். பாதிப்படைந்த அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு 25% பணம் கட்டவேண்டும். 5 கோடி என்றால் 25 லட்சம் வரை பணம் கட்ட வேண்டும் என்பதால் அங்கு செல்ல முடிவிதில்லை. அதை பயன்படுத்தி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மூலம் பணம் வசூல் செய்கிறார். பணத்தை கொடுத்தால் மட்டும் வரியை தளர்த்திவிடுகிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள். 
இந்த பிரச்னை தொடர்பாக முறையிட வணிக வரித் துறை அலுவலகத்தில் ஜேசியிடம் பல முறையிட்டும் எந்தப் பதிலும் இல்லை. பிரச்னையை முடித்து தருவதாக கூறுகிறார் சில நேரங்களில் ஆள் இல்லை என்று அனுப்பி அலைக்கழிக்கிறார்கள்'' என்று மனம் கொதித்தார். 
 
மேலும்  வணிகர் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறுகையில், ''மதுரை வணிகர் சங்கக் கோட்டம் இதில் ஐந்து மாவட்டங்கள் ஒருங்கிணைகிறது மதுரை, தேனி ,திண்டுக்கல் , ராமநாதபுரம் ,சிவகங்கை உட்படுகிறது . இதில் பல நபர்கள் இந்த வரி ஏய்ப்பினால் பாதிப்படைகின்றனர் சட்டதில் இல்லாது புது வரைமுறைகளை தீட்டி அதனை வரியாக பின்பற்ற வைக்கும் அதிகாரிகளின் போக்கு கண்டிக்கதக்கது. 
 
 
வரி விதிப்பு அதிகாரிகள் தன்னிச்சையா செயல்படுகிறார். அதனை . மேல் அதிகாரியிடம் புகார் தெரிவித்து பல மாதங்கள் ஆகியியும் எந்த நடவேடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு பதியவேண்டும் என்றால்கூட அதிற்கு பணம் கட்ட வேண்டும். அதுவும் 30 நாட்களில் கட்டவேண்டும். அதிகாரிகள் தங்களுக்கு பிடித்தார் போல் வரியை திட்டம் தீட்டுவது எந்த விததில் நியாயம்?'' என்று கேட்டார்.
 
மேலும் தமிழ்நாடு வடகம், மோர்வத்தல், அப்பளம் சங்க மாநில செயலாளர் திருமுருகன் கூறுகை, ''எங்களுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அரசு உடனடியா மாற்றவேண்டும் தள்ளுவண்டி வியாபரத்துக்குக்கூட சான்றிதல் கேட்கின்றனர். ஆனால் வரியில்லாத பொருளுக்கு வரி விதிக்கின்றனர். வணிகர்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை இவ்வாறு தொடரும் என்றால் வியாபரத்தில் கடும் சரிவு தோன்றும். அதனால் ஒரு சங்கிலி தொடராக பாதிப்பு இருக்கும் என்றார்.
 
-சே.சின்னதுரை,
 
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார் 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ