Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏமாற்றமளித்த ஆப்பிள்.. முதலீட்டாளர்கள் கலக்கத்தால் சரிவில் சந்தை!

காலை 10.15 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (25.10.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. 
 
நேற்றைய வர்த்தகத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதால் டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா மோட்டர்ஸ் போன்ற டாடா குழும பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால் சந்தை சரிந்தது. இதுமட்டுமின்றி மாதத்தின் இறுதி வியாழக்கிழமை நாளை எப் அன்ட் ஓ எக்ஸ்பியரி என்பதால் முதலீட்டாளர்கள் தங்களுடைய பொசினைக் க்ளோஸ் செய்து வந்ததால் சந்தை இறக்கத்தில் முடிவடைந்தது. 
 
 
இந்த நிலையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை இறக்கத்தில் முடிவடைந்துள்ளதால் இந்திய சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கை குறித்த டேட்டா எதிர்பார்ப்புக்கும் மீறி வெகு குறைவாக இருந்தது. இதன் தாக்கத்தினால் அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்தன. இதனையடுத்து இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் கேப் டவுன் ஓபன் ஆகி இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதுமட்டுமின்றி உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்தது. இதன் எதிரொலியாக ஆசிய மற்றும் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 219.66 குறைந்து 27,871.76 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 56.95 புள்ளிகள் குறைந்து 8,634.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கோடக் மகேந்திரா 807.40 2.65
பார்தி ஏர்டெல் 319.70 2.53
ஹீரோ மோட்டோகார்ப் 3,428.95 2.19
ஐடியா செல்லுலார் 76.30 1.33 
எம் அன்ட் எம் 1,314.85 0.84
 
விலை குறைந்த பங்குகள்
 
ஆக்சிஸ் வங்கி 489,75 -7,44
ஐசிஐசிஐ வங்கி 280,25 -3,11
டாடா மோட்டார்ஸ் (டி) 354.30 -2.46
டாடா மோட்டார்ஸ் 542,50 -2,04
பார்தி Infratel 373,00 -1,67

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close