Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எளிதாக வணிகம் செய்யும் சூழல்... மோடிக்கு ஏமாற்றமளித்த அறிக்கை!

உலக அளவில் எளிதாக வணிகம் செய்யும் சூழல் உள்ள நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா ஒரு இடம் மட்டும் முன்னேறி 130வது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
 
2012ம் ஆண்டு 139வது இடத்திலும், 2013ல் 132வது இடத்திலும், 2014ல் 140வது இடத்திலும், 2015ல் 142வது இடத்திலும் இந்தியா இருந்தது. 2016ம் ஆண்டுக்கான எளிதாக வணிகம் செய்யும் நாடுகளுக்கான பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 130வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 189 நாடுகள் கொண்ட பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
 
இப்போது 190 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ஒரு இடங்கள் முன்னேறி இந்தியா 130வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நடவடிக்கைக்கு மத்தியிலும் இந்தியா ஒரே ஒரு இடம் மட்டுமே முன்னேறி இருப்பது ஏமாற்றமான முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ