Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரீடெய்ல் முதலீட்டாளர்கள் முடிவால் இறக்கத்தில் இந்திய சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்றைய (26.10.16) காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை இறக்கத்தில் முடிவடைந்துள்ளதால் இந்திய சந்தை இறக்கத்தில் வர்த்தகமானது. குறிப்பாக அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கை குறித்த டேட்டா எதிர்பார்ப்புக்கும் மீறி வெகு குறைவாக இருந்தது. இதுமட்டுமின்றி உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனையில் சரிவை சந்தித்தது. இது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தில் அமெரிக்க சந்தைகள் சரிவில் முடிவடைந்தது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் கேப் டவுனில் ஓபன் ஆகி இறக்கத்தில் வர்த்தகமானது. 
 
இந்த நிலையில் வர்த்தகத்தின் இடையே சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமான காரணத்தினாலும், முதலீட்டாளர்கள் வங்கிப் பங்குகளை அதிகளவு விற்பனை செய்த காரணத்தினாலும், சர்வதேச சூழ்நிலையால் ஃபண்ட் மற்றும் ரீடெய்ல் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினாலும் சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 254.91 குறைந்து 27,836.51 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 76.05 புள்ளிகள் குறைந்து 8,615.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 78.70 4.52 
கோடக் மகேந்திரா 811.50 3.17
பார்தி ஏர்டெல் 317.70 1.89
ஹீரோ மோட்டோகார்ப் 3,419.05 1.89
மாருதி சுசூகி 5,869.10 1.52
 
விலை குறைந்த பங்குகள்
 
ஆக்சிஸ் வங்கி 487,55 -7,85
டாடா மோட்டார்ஸ் (டி) 344.50 -5.16
டாடா மோட்டார்ஸ் 530,05 -4,29
டாடா ஸ்டீல் 398,60 -4,01
ஐசிஐசிஐ வங்கி 278,40 -3,75
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ