Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் இறக்கத்தில் இந்திய சந்தை!

காலை 10.15 மணி நிலவரம்
 
நேற்றைய வர்த்தகத்தின் இடையே சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமான காரணத்தினாலும், முதலீட்டாளர்கள் வங்கிப் பங்குகளை அதிகளவு விற்பனை செய்த காரணத்தினாலும், சர்வதேச சூழ்நிலையால் ஃபண்ட் மற்றும் ரீடெய்ல் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினாலும் சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தது. 
 
இந்த நிலையில் இன்றும் (27.10.16) சர்வதேச சந்தையால் இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 28 புள்ளிகள் சரிந்து 26,809 புள்ளிகளாகவும், நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து 8,607 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. 
 
இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகளான ஹாங்சங், நிக்கி போன்ற சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகளும் தாக்கத்தில் சரிவடைந்து காணப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 87.96 குறைந்து 27,749.24 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 38.65 புள்ளிகள் குறைந்து 8,577.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடிசி 242.90 1.74
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,295.05 1.63
சன் பார்மா 748.70 1.35
ஓஎன்ஜிசி 292.50 0.83
அரவிந்தர் ஃபார்ம் 811.75 0.75
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 359,90 -2,85
டாடா மோட்டார்ஸ் (டி) 335.55 -2.60
யெஸ் பேங்க் 1,261.85 -2,20
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,099.50 -2,10
டாடா பவர் 79,15 -2,10
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ