Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஃப் அன்ட் ஓ எக்ஸ்பியரி... ஏற்றத்தில் முடிந்த சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (27.10.16) சர்வதேச சந்தையால் இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தது.  காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 28 புள்ளிகள் சரிந்து 26,809 புள்ளிகளாகவும், நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து 8,607 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகளான ஹாங்சங், நிக்கி போன்ற சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்ததால் இந்திய சந்தைகளும் தாக்கத்தில் சரிவடைந்து காணப்பட்டது. 
 
டாடா நிர்வாகத்தில் அதிரடி மாற்றம், சர்வதேச சந்தையில் பலவீனம் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனங்களின் காலாண்டில் திருப்தியின்மை போன்ற காரணங்களால் கடந்த இரண்டு நாட்களாக இறக்கத்தில் வர்த்தகமாகி வந்த இந்திய சந்தை இன்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக மாதத்தின் இறுதி வியாழக்கிழமையான இன்று முதலீட்டாளர்கள் டெரிவேடிவ்வை க்ளோஸ் செய்ததாலும், எஃப்எம்சிஜி மற்றும் பார்மா போன்ற பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்ததாலும் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 79.39 புள்ளிகள் குறைந்து 27,915.90 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி எந்த மாற்றமும் இல்லாமல் 8,615.25 என்ற நிலையில் நிறைவடைந்தது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP