Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டியின் போக்கு: செய்திகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும்!

 நிஃப்டியின் போக்கு:  செய்திகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும்!

டாக்டர் எஸ். கார்த்திகேயன்

 
குழப்பமான நிலை  நிலவுகின்றது என்றும் வியாழன் வரை எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம் என்றும் வெள்ளியன்று தீபாவளிக்குண்டான செண்டிமெண்ட் செட்டாகிவிட வாய்ப்புள்ளது என்றும்  டெக்னிக்கல்கள் இதுபோன்ற சூழ்நிலையில் பெரிய அளவில் உதவிகரமாக இருக்காது என்பதால் டெக்னிக்கல் டிரேடர்கள் கவனத்துடன் டிரேடிங் செய்யவேண்டியிருக்கும் என்றும்   எக்ஸ்பைரிக்கு முன்னால் இறக்கம் வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது என்றும் சொல்லியிருந்தோம்.  
 
வாரத்தின் இரண்டு நாள் இறக்கத்திலும், இரண்டு நாள் ஏற்றத்திலும் ஒரு நாள் ஏற்ற இறக்கம் ஏதும் இல்லாமலும் முடிவடைந்தது.  குறுகிய கால டிரேடிங் செஷனான தீபாவளி முகூர்த் டிரேடிங்கில் பன்னிரண்டு புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.  
 
நான்கு டிரேடிங் தினங்களை கொண்ட வாரத்தினுள் நுழைய இருக்கின்றோம். நிப்டியைப் பொறுத்தவரையில் டெக்னிக்கலாக பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் சில வாரங்களாக வந்துவிடவில்லை.
 
ஏற்றத்தையோ அல்லது இறக்கத்தையோ உருவாக்குவதற்கான ட்ரிக்கர்கள் எதுவும் இல்லாத நிலையில் நிஃப்டி இப்படிப்பட்ட சூழலில் செயல்பட்டுவந்தது. வரும் வாரத்தில் அமெரிக்க வட்டிவிகிதத்திற்கான எப்ஓஎம்சி கமிட்டி மீட்டிங் மற்றும் பேங்க் ஆப் இங்கிலாந்தின் வட்டிவிகித முடிவுகள் போன்றவை வெளிவர இருக்கின்றன.
 
 
செய்திகள் மற்றும் நிகழ்வுகளைப் பொறுத்தே சந்தையின் மூவ்கள் இருக்கும் என்பதால் டெக்னிக்கல் டிரேடர்கள் சற்று கவனத்துடன் வியாபாரம் செய்வது நல்லது. பெரும்பாலும் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரத்திற்கான வாய்ப்பையே சந்தையில் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே பல வாரங்களாக கூறிவந்ததைப்போல் இறக்கம் வந்தால் 8510/8320/8090 போன்ற லெவல்களிலேயே சப்போர்ட்கள் இருக்கின்றன என்பதால் அந்த அளவிற்கான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் மட்டுமே நிப்டியில் டிரேடிங் செய்ய முயற்சிக்கலாம்.  அதிக கவனம் தேவை.
 
ஷார்ட் சைட் மற்றும் ஓவர் நைட் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது. 
வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள். 
 
நிப்டி30-10-16 முகூர்த் டிரேடிங்கின்முடிவில் 8625.70 - 12.30   
வாராந்திர அளவில் 04-11-16 வரை டிரேடிங்கிற்கு – ஸ்பாட் நிப்டி   
சப்போர்ட் லெவல் 8538 8451   
ரெசிஸ்டென்ஸ் லெவல் 8725 8824   
தினசரி அளவில் 01-11-16 டிரேடிங்கிற்கு – ஸ்பாட் நிப்டி   
சப்போர்ட் லெவல் 8602 8578   
ரெசிஸ்டென்ஸ் லெவல் 8664 8702  
  
பேங்க் நிப்டி30-10-16 முகூர்த் டிரேடிங்கின்முடிவில் 19523.55 -32.40   
வாராந்திர அளவில்  04-11-16 வரை டிரேடிங்கிற்கு – ஸ்பாட் பேங்க் நிப்டி   
சப்போர்ட் லெவல் 19210 18896   
ரெசிஸ்டென்ஸ் லெவல் 19880 20237   
 
தினசரி அளவில் 01-11-16 டிரேடிங்கிற்கு – பேங்க் நிப்டி   
சப்போர்ட் லெவல் 19450 19376   
ரெசிஸ்டென்ஸ் லெவல் 19632 19740  
 
முக்கிய பொருளாதார டேட்டா வெளியீட்டு அட்டவணை 
 
இந்தியா   
 
31-10-2016 இன்ப்ராஸ்ட்ரெக்சர் அவுட்புட் – Y-o-Y   
 
01-11-2016 நிக்கி மேனுபேக்சரிங் பிஎம் ஐ   
 
அமெரிக்கா   
01-11-2016 ஐஎஸ் எம் மேனுபேக்சரிங் பிஎம் ஐ   
02-11-2016 ஏடிபி  எம்ப்ளாயிண்மெண்ட் சேஞ்ச்   
02-11-2016 ஃபெடரல் வட்டி விகித முடிவுகள்   
03-11-2016 ஐஎஸ் எம் நான் மேனுபேக்சரிங்  பிஎம் ஐ   
04-11-2016 பேலன்ஸ் ஆப் ட்ரேட்   
04-11-2016 அன் எம்ப்ளாயிண்மெண்ட் ரேட்   
  
யுனைட்டெட் கிங்டம்   
 
03-11-2016 பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டிவிகித முடிவுகள்   
 
03-11-2016 பேங்க் ஆப் இங்கிலாந்து- குவான்டிடேட்டிவ் ஈசிங்  
 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ