Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தை!

காலை 10.10 மணி நிலவரம்
 
டாடா நிர்வாகத்தில் அதிரடி மாற்றம், சர்வதேச சந்தையில் பலவீனம் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனங்களின் காலாண்டில் திருப்தியின்மை போன்ற காரணங்களால் கடந்த இரண்டு நாட்களாக இறக்கத்தில் வர்த்தகமாகி வந்த இந்திய சந்தை நேற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. குறிப்பாக மாதத்தின் இறுதி வியாழக்கிழமையான நேற்று முதலீட்டாளர்கள் தங்களது டெரிவேடிவ்வை க்ளோஸ் செய்ததாலும், எஃப்எம்சிஜி மற்றும் பார்மா போன்ற பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி குவித்ததாலும் சந்தை ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. 
 
இந்த நிலையில் இன்று (28.10.16) காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சந்தை இறக்கத்தில் தொடங்கியது. சென்செக்ஸ் 82.48 புள்ளிகள் குறைந்து 27,833.42 என்ற நிலையிலும், நிஃப்டி 18.60 புள்ளிகள் குறைந்து 8,596.65 என்ற நிலையிலும் குறைந்து காணப்பட்டது. 
 
தற்போது சென்செக்ஸ் 35.07 புள்ளிகள் குறைந்து 27,880.04 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 2.45 புள்ளிகள் உயர்ந்து 8,618.10 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா 435.25 5.11
டாடா மோட்டார்ஸ் (டி) 348.10 2.74
டாடா மோட்டார்ஸ் 534.10 2.32
கோல் இந்தியா 322.00 1.80
பேங்க் ஆப் பரோடா 155.60 1.67 
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசிஐசிஐ வங்கி 278,95 -1,88
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,072.40 -1,20
பிபிசிஎல் 668,60 -1,18
சிப்லா 580,10 -0,96
கெயில் 431,50 -0,90
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ