Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டார்ட் அப் எண்­ணிக்கை 2020ல் 10,500 ஆக அதிகரிக்கும்!

நம் நாட்டில் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் எண்­ணிக்கை 2020ல் 10,500 ஆக அதிகரிக்கும் என்று நாஸ்காம் அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் எண்­ணிக்கை ஆண்­டு­தோறும் 10 முதல் 12 சதவிகிதம் வரை அதி­க­ரித்து வரு­கி­றது. இது, வரும் ஆண்­டு­களில், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு அதிகரிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதி­க­ளவில் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் உள்ள நக­ரங்­களில், பெங்­க­ளூரு, தொடர்ந்து முத­லி­டத்தில் உள்­ளது. அடுத்த இடங்­களில், டில்­லியை உள்­ள­டக்­கிய தலை­நகர் பிராந்­தியம், மும்பை, ஐத­ராபாத், புனே, சென்னை ஆகிய நக­ரங்கள் உள்­ளன.
 
இந்­த ஆண்டு மட்டும் இது­வரை 1,400க்கும் அதி­க­மான புதிய ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் தோன்­றி­யுள்­ளன. டிசம்பர் இறு­திக்குள் நாட்டில் செயல்­பாட்டில் உள்ள, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை, 4,750க்கும் அதி­க­மாக அதிகரிக்கும் என்று கணிக்­கப்­பட்டு உள்­ளது. அடுத்த நான்கு ஆண்­டு­களில், ஸ்டார்ட் நிறு­வ­னங்கள், இரு மடங்­கிற்கும் அதி­க­மாக உயர்ந்து, 10,500 ஆக அதி­க­ரிக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ