Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலை அதிகரித்த பங்குகள், விலை குறைந்த பங்குகள்

 விலை அதிகரித்த பங்குகள், விலை குறைந்த பங்குகள்

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 12 மணிக்கு 14.89 புள்ளிகள் அதிகரித்து 27945 புள்ளிகளில்  வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 17 புள்ளிகள் அதிகரித்து 8643 புள்ளிகளில்  வர்த்தகமாகி வருகிறது .
 
தங்கம் (10 கிராம்) 140 ரூபாய் விலை அதிகரித்து 30,090 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியும் (1 கிலோ) தங்கத்தை போலவே விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.72 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
 
வங்கி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஐ.டி போன்ற துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலும், மெட்டல், ஆட்டோமொபைல்,  போன்ற துறை சார்ந்த பங்குகள் விலை ஏற்றத்திலும் வர்த்தகமாகி வருகிறது.
 
அதோடு சர்வதேச அலவில் ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ், சீனாவின் ஹேங்சேங் மற்றும் ஷாங்காய் காம்பொசைட் போன்ற பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. தைவான் மற்றும் கொரிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.  

விலை அதிகரித்த பங்குகள் :
 
ஹிண்டால்கோ 158.50
ஈஷர் மோட்டார்ஸ் 24858.30
ஹெச்டிஎஃப்சி 1416.20
பார்தி இன்ஃப்ராடெல் 355.05
பிஹெச் இ எல் 141.85

விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா 431.95
ஆக்ஸிஸ் பேங்க் 480.05
டாடா பவர் 77.05
சிப்லா 572.20
டாடா மோட்டார்ஸ் 526.00
 
 
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 53.60 புள்ளிகள் குறைந்து 27876.6 புள்ளிகளுக்கும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 0.55 புள்ளிகள் உயர்ந்து 8626.25 புள்ளிகளுக்கும் வர்த்தகம் நிறைவடைந்தது. 
 
தங்கம் (10 கிராம்) 205 ரூபாய் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி (1 கிலோ) 603 ரூபாய் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. 
 
வர்த்தக நேர முடிவில் ஆட்டோ, மெட்டல் போன்ற துறைகள் நன்றாக விலை அதிகரித்து வர்த்தகமாகி இருந்தன.  மற்ற துறைகள் சற்றே மந்த நிலையிலும், இறக்கத்திலுமே வர்த்தகமானது.

விலை அதிகரித்த பங்குகள் :
ஐஷர் மோட்டார்ஸ் 25,321.00 5.43
ஜிண்டால்கோ 156.95 4.81
டாடா ஸ்டீல் 417.70 3.21
ஹெச்.டி.எஃப்.சி 1,417.20 2.88
என்.டி.பி.சி 155.00 2.62

விலை குறைந்த பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 475.80 -2.44
சன் பார்மா 733.75 -1.92
ஜீ என்டர்டெயின்மென்ட் 509.35 -1.76
கோட்டக் மஹிந்திரா 805.55 -1.72
டிசிஎஸ் 2,350.00 -1.72
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ