Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிபிஎஃப் கணக்கு ஆரம்பிப்பது எப்படி?

பிபிஎஃப் கணக்கு ஆரம்பிப்பது எப்படி? 
 
- எம். குமரேசன்
 
தமிழகத்தில் இப்போது பிபிஎஃப் எனப்படும் பொது வைப்பு நிதி திட்டத்தில் மக்கள் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்த மார்ச் மாதம் வரையில் தபால் அலுவலகங்களில் மட்டும் 1,92,151 பேர் பிபிஎஃப்பில் முதலீடு செய்துள்ளனர். தபால் நிலையங்களில்  ரூ. 64 கோடி திரண்டு கிடக்கிறது.
 
மக்களிடையே இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட ஏற்பட இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று இந்திய தபால்துறை எதிர்பார்க்கிறது. 
 
சரி பிபிஎஃப் கணக்கினைத் தொடங்குவது எப்படி?. 
 
தபால் அலுவலகங்களை பொறுத்த வரை போஸ்ட் மாஸ்டர் மட்டும் இருந்தால், அந்த தபால் அலுவலகத்தில் பிபிஎஃப் கணக்குத் திட்டம் இருக்காது. போஸ்ட் மாஸ்டருடன் மற்றொரு அலுவலர் பணியாற்றும் தபால் அலுவலகத்தில்தான் பிபிஎஃப் கணக்குத் தொடங்க முடியும். இருவர் கூட்டாக சேர்ந்த பிபிஎஃப் கணக்குத் தொடங்க முடியாது. 
 
சந்தாதாரர் தனது குழந்தைகள் மைனர்களாக இருந்தால், அவர்கள் பெயரிலும் கணக்கினைத் தொடங்க முடியும். ஆனால், மைனர்கள் பெயரில் முதலீடுத் தொகையில் சில வரம்புகள் உள்ளன. 
இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாடு இந்தத் திட்டத்தின் மீது இருக்கிறது. அதனால், தைரியமாக யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
 
முதலீடு , முதலீட்டு பெருக்கம் மற்றும் முதிர்வுக்கு வரி இல்லாமல் கூட்டு வட்டி லாபத்தை ஈட்டித் தருவதால், பொதுமக்களும் விருப்பப்பட்டு பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்திய வருமான வரிச்சட்டம் 80 சி- யின்படி, ஓராண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும். கிடைக்கும்.
 
பிபிஎப். திட்டத்தில் வருடத்திற்கு ரூ. 500 முதல் 1,50,000 வரை முதலீடு செய்யலாம். ரூ. 500 என்பது மிகக் குறைவான தொகை என்பதால், ஏழை எளியவர்களும் இந்தத் திட்டத்தில் எளிதாக சேர முடியும். முதலீட்டுக்கு இப்போது 8 சதவிகிதம் வட்டி அளிக்கப்படுகிறது. 
 
தற்போது  தபால் அலுவலகம் மட்டுமல்லாமல் ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற தனியார் வங்கிகள் மற்றும் எஸ்பிஐ போன்ற பொதுத்துறை வங்கிகள் கூட பிபிஎஃப் சேவையை அளிக்கின்றன. 
 
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம், புகைப்படங்கள் சமர்ப்பித்து பிபிஎஃப் கணக்கைத் தொடங்கலாம். வங்கிகளில் பிபிஎஃப் கணக்குகள் ஆன்லைனில் கையாளலாம். 
 
நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) மொத்த வைப்புத் தொகையாக ஒரே தவணையிலோ அல்லது 12 தவணையிலோ செலுத்த வழிவகை உள்ளது. ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவே பிபிஎஃப் தொகையை செலுத்தலாம். இதில் எல்லாம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இந்த திட்டத்தின் கீழ் வாரிசுதாரர் இணை வாரிசுதாரரை நியமித்துக் கொள்ளலாம். கணக்குத் தொடங்கும் போதே வாரிசுதாரரை நியமித்து விட வேண்டும்.  
 
இது  15 ஆண்டு முதலீட்டு திட்டம்.  சந்தாதாரர் விருப்பப்பட்டால், மேலும் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ள முடியும்.  வைப்புத் தொகையில் இருந்து 25 சதவிகிதம் வரை  6ம் ஆண்டு வரை கடன் அளிக்கப்படுகிறது. கடன்களை 24 மாதத்திற்குள் கட்டி விட வேண்டும். கணக்குத் தொடங்கப்பட்ட 7வது ஆண்டில் இருந்து பிபிஎஃப் கணக்கில் இருந்து ஒரு தொகையினை திரும்ப பெற வழிவகை இருக்கிறது.
 
பிபிஎஃப் கணக்கினை ஒரு தபால் நிலையத்தில் இருந்து இன்னொரு தபால் நிலையத்துக்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். 
 
போஸ்ட் ஆபிஸ்களில் உள்ள பிபிஎஃப் கணக்கைக் கூட வங்கிகளுக்கும் மாற்றிக் கொள்ள வழிவகை உள்ளது. சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் மாற்றம் செய்வதற்கான ஆவணங்களை நிரப்பி கொடுத்து விருப்பப்பட்ட வங்கிகளுக்கும் பிபிஎஃப் கணக்கினை மாற்றிக் கொள்ளலாம். 
பிபிஎஃப் கணக்கில் இணைந்த மூன்றாவது நிதி ஆண்டில் இருந்து. இந்த திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர் கடன் பெறும் வசதி இருக்கிறது.

பிபிஎஃப் தொகை எப்படி க்ளெய்ம் செய்வது எப்படி என்கிற கட்டுரை நவம்பர் 6, 2016 வெளியாகும் நாணயம் விகடன் இதழில் இடம் பெற்றிருக்கிறது. படித்து பயன் பெறுங்கள். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ