Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க வட்டி விகிதத்தால் அலறும் இந்திய சந்தை!

காலை 10.15 மணி நிலவரம்
 
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 53.60 புள்ளிகள் குறைந்து 27876.6 புள்ளிகளுக்கும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 0.55 புள்ளிகள் உயர்ந்து 8626.25 புள்ளிகளுக்கும் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தக நேர முடிவில் ஆட்டோ, மெட்டல் போன்ற துறைகள் நன்றாக விலை அதிகரித்து வர்த்தகமாகி இருந்தன.  மற்ற துறைகள் சற்றே மந்த நிலையிலும், இறக்கத்திலுமே வர்த்தகமானது.
 
 
இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முடிவு இன்றுடன் முடிவடைகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருவதால் அதன் காரணமாக ஆசிய மற்றும் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 262.00 புள்ளிகள் குறைந்து 27,616.34 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 86.05 புள்ளிகள் குறைந்து 8,540.20 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எம் அன்ட் எம் 1,355.15 2.17
பார்தி இன்ப்ராடெல் 361.05 1.58
என்டிபிசி 156.85 1.19
ஹெச்யூஎல் 841.40 0.74
 
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் பேங்க் 1,214.55 -2,79
பேங்க் ஆப் பரோடா 151,30 -2,5
பிபிசிஎல் 659,80 -2,42
எஸ்பிஐ 252,85 -2,36
ஓஎன்ஜிசி 282,75 -2,21
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ