Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறுதிக்கட்டத்தில் அதிபர் தேர்தல் இறக்கத்தில் இந்திய சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்றைய (02.11.16) காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சந்தை இறக்கத்தில் காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 64.90 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் எண்ணெய் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.73% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.75 புள்ளிகள் குறைந்து 8,531.50 புள்ளிகளாக இருந்தது. 
 
 
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முடிவு இன்றுடன் முடிவடைகிறது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின.
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 349.39 புள்ளிகள் குறைந்து 27,527.22 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 112.25 புள்ளிகள் குறைந்து 8,514.20 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
எம் அன்ட் எம் 1,369.30 3.24
பார்தி இன்ப்ராடெல் 366.30 3.05
இன்டஸ் இன்ட் வங்கி 1,229.45 1.25
என்டிபிசி 156.50 0.97
ஹெச்யூஎல் 841.10 0.70
 
 
விலை குறைந்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி 277,25 -4,12
டாடா மோட்டார்ஸ் (டி) 335.05 -3.87
பேங்க் ஆப் பரோடா 150.00 -3.41 
டாடா மோட்டார்ஸ் 513,30 -3,26
பி.எச்.இ.எல் 137,00 -3,21
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ