Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய சந்தை ப்ளாட் ஆக வர்த்தகம்!

காலை 10.20 மணி நிலவரம்
 
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்குவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பால் நேற்றைய இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின.
 
 
இந்த நிலையில் இன்று (03.11.16) நிஃப்டி 8,500 என்ற நல்ல சப்போர்ட்டை உடைத்து இப்போது ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. ஜூலை 11ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக இந்த சப்போர்ட்டை உடைத்துள்ளது. ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, ஆட்டோ பங்குகளின் விலை சரிவடைந்து காணப்படுகிறது.  
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 33.79 புள்ளிகள் உயர்ந்து 27,559.00 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 14.00 புள்ளிகள் உயர்ந்து 8,529.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
ஹிண்டால்கோ 165.05 5.46
பார்தி இன்ப்ராடெல் 376.25 2.72
ஏசிசி 1,512.85 1.66
டாடா பவர் 78.20 1.49
ஐடியா செல்லுலார் 75.35 1.41
 
 
விலை குறைந்த பங்குகள்
ஓஎன்ஜிசி 269,65 -2,74
ஏஷியன் பெயின்ட்ஸ் 1,053.45 -0,88
பிபிசிஎல் 654,45 -0,86
டாடா மோட்டார்ஸ் (டி) 332.60 -0.73
என்டிபிசி 155,35 -0,73
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP