Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபர் தேர்தலால் ஆட்டம் ஆடும் சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (03.11.16) காலை நேர வர்த்தகத்தில் நிஃப்டி 8,500 என்ற நல்ல சப்போர்ட்டை உடைத்து ப்ளாட் ஆக வர்த்தகமானது. ஜூலை 11ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக இந்த சப்போர்ட்டை உடைத்துள்ளது. ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, ஆட்டோ பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது. 
 
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 81 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 414.29 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80.91 புள்ளிகள் சரிந்து 27,446.31 புள்ளிகளாக இருந்தது. ஐடி, டெக், ஆட்டோ மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.43% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24.40 புள்ளிகள் குறைந்து 8,489.60. புள்ளிகளாக இருந்தது.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்குவதையொட்டி முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இன்று சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்தது. அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் எதுவும் உயர்த்தப்படவில்லை. அடுத்த மாதம் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 96.94 புள்ளிகள் குறைந்து 27,430.28 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 29.05 புள்ளிகள் குறைந்து 8,484.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டால்கோ 162.80 4.03
பார்தி இன்ப்ராடெல் 380.90 3.99
ஹீரோ மோட்டோகார்ப் 3,378.50 1.55
ஏசிசி 1,510.10 1.47
ஐடிசி 240.30 1.26
 
விலை குறைந்த பங்குகள்
அதானி துறைமுகங்கள் 288,20 -3,90
ஓஎன்ஜிசி 267,55 -3,50
கிராஸிம் 909,70 -2,79
ஆரோபிந்தோ பார்மா 769,30 -2,56
பிபிசிஎல் 644,05 -2,44
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ