Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் தர நிலையை குறைத்தது, அமெரிக்க தர நிர்ணய நிறுவனம்

 
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவினாலும்கூட, இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து, பொருளாதார வளர்ச்சியை  வேகப்படுத்தியது.  வேகமாக முன்னேறி வருகிற நாடாக இந்தியா உள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை அதிகமாக ஈர்ப்பதுடன், கடன் வாங்கும் தகுதியையும் வளர்த்துக்கொள்ள முடியும் என மத்திய அரசு நம்புகிறது. 
 
 
இந்த நிலையில் இந்தியாவின் தர நிலையை குறைத்து மதிப்பிட்டு அமெரிக்க தர நிர்ணய நிறுவனமான ‘எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ்’ அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியா பிபிபி என்ற நிலையில் தொடருவதாகவும், அடுத்த  இரு ஆண்டுகளுக்கு இந்த நிலையில் இருந்து உயர்த்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த பி.பி.பி.’ நிலையானது, மிகக்குறைந்த முதலீட்டு தரத்துக்கு உரியது. அதாவது, பெரிய அளவில் முதலீடுகள் செய்வதற்கு இந்தியாவில் சாதமான சூழல் இல்லை என்று உணர்த்துவதாகும். 
 
எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய 5 அம்சங்கள்:
 
1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவுக்கு 69%  அளவுக்கு கடன் உள்ளது.
 
2. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  7.9% ஆக இருக்கும்.
 
3. நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.4% ஆகமாக இருக்கும்.
 
4. இந்தியாவின் தரத்தை உயர்த்த முடியாமல் போனதற்கு காரணம், தனி நபர் ஆண்டு வருமானம் 1700 டாலராக (சுமார் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம்) இருப்பதாகும்.
 
5. இந்தியாவின் தரத்தை உயர்த்த முடியாமல் போனதற்கு மற்றைய காரணங்கள் கடன் சுமை மற்றும் பலவீனமான பொது நிதி நிலைமை. இந்தியாவின் அதிகபட்ச நிதி பற்றாக்குறைதான், கடன் சுமைக்கு காரணமாக அமைந்துள்ளது.
 
இதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்த்து உள்ளது. மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ், வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள், கொள்கைகளுக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடை போடும். இந்த தர நிலைமை மேம்படுத்தப்படாவிட்டால், அதற்காக நாம் பெரிதான அளவுக்கு கவலைப்படத் தேவை இல்லை. இந்த தர நிர்ணயம், தொடர்பற்றதாக இருக்கிறது. மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளது. ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிச்சட்டம், திவால் சட்டம் போன்ற அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது." என்றார். 
 
சேனா சரவணன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close