Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டு கடன் வட்டி குறைப்பு; எஸ்பிஐ அதிரடி!

கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி விழாக்கால திட்டத்திற்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 9.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் எஸ்பிஐ வங்கி பொதுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவிகிதம் குறைத்ததையொட்டி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது.
 
 
விழாக்கால திட்டம், பெண்களுக்கான வீட்டுக்கடன் ஆகியவற்றிக்கு வட்டி விகிதம் 9.1 சதவிகிதமாகவும் மற்றவர்களுக்கு வீட்டுக்கடன் விகிதம் 9.15 சதவிகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வீட்டுக்கடனுக்கு ஒப்புதல் கிடைப்பவர்களுக்கு மட்டுமே விழாக்கால திட்டம் பொருந்தும்.
 
தற்போதைய வட்டிக் குறைப்பின் மூலம் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய வங்கிகளை விட குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கியாக எஸ்பிஐ உள்ளதாக எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ