Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபர் தேர்தல் அதிர்வலையால் முதலீட்டாளர்கள் உஷார்!

காலை 10.15 மணி நிலவரம்
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்குவதையொட்டி முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நேற்று சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று (04.11.16) காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் எஃப்எம்சிஜி பங்குகளால் அதிகரித்து காணப்பட்டதால் சந்தை பாசிட்டிவ் ஆக வர்த்தகமானது. 
 
 
ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் குடியரசுக் டொனால்டு டிரம்ப் இடையே அமெரிக்க அதிபர் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு வரும் செவ்வாய்கிழமை நவம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இதன் தாக்கத்தினால் முதலீட்டாளர்கள் மத்தியில் அண்மை நாட்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொள்வதால் சந்தை இறக்கத்துடன் காணப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 33.96 புள்ளிகள் குறைந்து 27,396.32 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 21.70 புள்ளிகள் குறைந்து 8,462.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடிசி 250.80 4.37
ஹெச்யூஎல் 856.60 2.05
ஹெச்சிஎல் டெக் 774.05 1.43
என்டிபிசி 154.80 1.14
ஓஎன்ஜிசி 269.80 0.84
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 363,70 -4,52
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,117.20 -4,45
சன் பார்மா 672,55 -4,42
லூபின் 1,414.90 -3,77
ஆரோபிந்தோ பார்மா 744,05 -3,28
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ