Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாரத்தின் இறுதி நாள்... இறக்கத்தில் இந்திய சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (04.11.16) காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் எஃப்எம்சிஜி பங்குகளால் அதிகரித்து காணப்பட்டதால் சந்தை பாசிட்டிவ் ஆக வர்த்தகமானது. எனினும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் குடியரசுக் டொனால்டு டிரம்ப் இடையே அமெரிக்க அதிபர் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு வரும் செவ்வாய்கிழமை நவம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இதன் தாக்கத்தினால் முதலீட்டாளர்கள் மத்தியில் அண்மை நாட்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொள்வதால் சந்தை இறக்கத்துடன் காணப்படுகிறது.  
 
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 511.23 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சரிவுடன் காணப்படுகிறது. ஐடி, டெக், ஆட்டோ மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன. 
 
இதுமட்டுமின்றி அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கியதாலும், அமெரிக்க அதிபர் தேர்தலால் சர்வதேச சந்தை இறக்கத்துடன் வர்த்தகம் ஆனதாலும் சந்தை இறக்கத்துடன் காணப்பட்டது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 156.13 புள்ளிகள் குறைந்து 27,274.15 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 51.20 புள்ளிகள் குறைந்து 8,433.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹெச்சிஎல் டெக் 794.75 4.15
ஐடிசி 249.05 3.64
டாடா மோட்டார்ஸ் (டி) 335.65 1.15
விப்ரோ 452.50 1.09
ஹெச்யூஎல் 848.00 1.02
 
விலை குறைந்த பங்குகள்
 
சன் பார்மா 651,50 -7,41
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,079.70 -5,60
அரவிந்தர் ஃபார்ம் 728,10 -5,36
பார்தி இன்ப்ராடெல் 364,05 -4,42
கோல் இந்தியா 315,90 -3,39

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close