Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க சந்தை அதிகரிப்பால் இந்திய சந்தை உயர்வு!

காலை 10.10 மணி நிலவரம்
 
ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் குடியரசுக் டொனால்டு டிரம்ப் இடையே அமெரிக்க அதிபர் வேட்பாளர்களிடையே அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு நாளை நவம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இதன் தாக்கத்தினால் முதலீட்டாளர்கள் மத்தியில் அண்மை நாட்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொள்வதால் வாரத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தது. இதுமட்டுமின்றி அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கியதாலும், அமெரிக்க அதிபர் தேர்தலால் சர்வதேச சந்தை இறக்கத்துடன் வர்த்தகம் ஆனதாலும் சந்தை இறக்கத்துடன் காணப்பட்டது. 
 
 
இந்த நிலையில் இன்று (07.11.16) சர்வதேச சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹில்லாரி கிளின்டன் மீதான குற்றச்சாட்டை எஃப்பிஐ தெளிவாக்கியுள்ளது. இதன் தாக்கத்தினால் அமெரிக்க சந்தை அதிகரித்ததினால் இந்திய சந்தை முன்னேற்றத்தில் காணப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 226.74 புள்ளிகள் உயர்ந்து 27,501.23 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 77.35 புள்ளிகள் உயர்ந்து 8,511.85 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
லூபின் 1,501.15 5.65
ஆரோபிந்தோ பார்மா 752.95 3.41
பிபிசிஎல் 662.85 3.01
கிராஸிம் 925.15 2.75
ஐடிசி 255.45 2.57
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 358,25 -1,59
ஹெச்யூஎல் 839,70 -0,98
பஜாஜ் ஆட்டோ 2,788.25 -0,93
டிசிஎஸ் 2,317.60 -0,56
விப்ரோ 450,00 -0,55
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ