Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹில்லாரி மீது குற்றச்சாட்டு... எஃப்பிஐ அறிவிப்பால் சந்தை அதிகரிப்பு!

 
 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (07.11.16) காலை நேர வர்த்தகத் தொடக்கத்தில் சர்வதேச சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்ததால் இந்திய சந்தை அதிகரித்து காணப்பட்டது.
 
குறிப்பாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹில்லாரி கிளின்டன் மீதான குற்றச்சாட்டை எஃப்பிஐ தெளிவாக்கியுள்ளது. இதன் தாக்கத்தினால் அமெரிக்க சந்தை மற்றும் ஆசிய சந்தைகள் அதிகரித்ததினால் இந்திய சந்தை உயர்வுடன் வர்த்தகமானது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்த சந்தை இன்று உயர்வுடன் நிறைவடைந்து  காணப்பட்டது. 
 
 
ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார். அப்போது அவரது தனிப்பட்ட இ-மெயில் முகவரியை அரசு பணிக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ.) ஏற்கனவே விசாரணை நடத்தியது. இதில் ஹிலாரி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி கடந்த ஜூலை மாதம் வழக்கை முடித்து விட்டது.இந்த விவகாரம் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்து வந்தது. இந்த பிரச்சினையை தொடக்கத்திலிருந்தே எழுப்பிய குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரி ரஷியாவுடன் பகிர்ந்து கொண்ட இ-மெயில்களால் அமெரிக்காவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறியதுடன், ஹிலாரியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிரசாரம் செய்து வந்தார்.
 
இதைப்போல இந்த பிரச்சினை தொடர்பாக எஃப்பிஐ மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என குடியரசு கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அப்படி ஒரு விசாரணை தேவையில்லை என எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் கொமே சமீபத்தில் கூறி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார். ஆனால் இந்த விவகாரம் கடந்தவாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. ஹிலாரியின் தனிப்பட்ட இ-மெயில்களை மீண்டும் ஆய்வு செய்ய எஃப்பிஐ அமைப்பு முடிவு செய்தது. இதற்கான அனுமதியை (வாரண்டு) பெற்றுள்ள ஜேம்ஸ் கொமே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கினார். 
 
இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எஃப்பிஐ உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஹிலாரி மீது புதிய நடவடிக்கை ஏதுமில்லை. நாங்கள் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அறிவித்ததுபோல் ஹிலாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் ஏதும் தற்போதைய விசாரணையில் சிக்கவில்லை என எஃப்பிஐ அறிவித்துள்ளது.
 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 184.84 புள்ளிகள் உயர்ந்து 27,458.99 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 63.30 புள்ளிகள் உயர்ந்து 8,497.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
லூபின் 1,518.60 6.88
ஹிண்டால்கோ 167.60 5.51
ஆரோபிந்தோ பார்மா 767.30 5.38
எஸ்பிஐ 252.70 4.06
பேங்க் ஆப் பரோடா 148.05 3.86 
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 355,40 -2,38
டாடா மோட்டார்ஸ் (டி) 327.85 -2.32
டிசிஎஸ் 2,277.05 -2,30
லார்சன் 1,398.00 -1,54
ஹெச்யூஎல் 837,65 -1,22

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ