Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று அமெரிக்க அதிபர் தேர்தலால் சந்தை அதிகரிப்பு!

காலை 10.25 மணி நிலவரம்
 
இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எஃப்பிஐ உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்பட்டது.
 
 
இந்நிலையில், ஹிலாரி மீது புதிய நடவடிக்கை ஏதுமில்லை. நாங்கள் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அறிவித்ததுபோல் ஹிலாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் ஏதும் தற்போதைய விசாரணையில் சிக்கவில்லை என எஃப்பிஐ அறிவித்தது. இதன் காரணத்தினால் இந்திய சந்தை நேற்று ஏற்றத்தில் முடிவடைந்தது.
 
இந்த நிலையில் இன்று (08.11.16) காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சர்வதேச சந்தை அதிகரித்து காணப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 29.46 புள்ளிகள் உயர்ந்து 27,490.87 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 10.65 புள்ளிகள் உயர்ந்து 8,503.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 528.75 4.42
டாடா மோட்டார்ஸ் (டி) 341.70 4.22
பி.எச்.இ.எல் 142.50 2.48
ஹிண்டால்கோ 171.75 2.48
ஐசிஐசிஐ வங்கி 285.15 2.31
 
விலை குறைந்த பங்குகள்
 
சன் பார்மா 642,80 -1,85
ஐடிசி 253,30 -1,25
மாருதி சுசூகி 5,660.00 -0,98
அரவிந்தர் ஃபார்ம் 759,95 -0,96
சிப்லா 540,80 -0,91
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP